How to get back money from wrong account transfer: மொபைல் பேங்கிங் மூலம், தவறான கணக்கிற்கு அனுப்பட்ட பணத்தை திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ…
மொபைல் பேங்கிங் வசதியானது வாடிக்கையாளர்களுக்கு எங்கும், எந்த நேரத்திலும் வங்கி சேவைகளை அணுக அனுமதிக்கிறது. UPI, நெட் பேங்கிங், மொபைல் வாலட் போன்ற வங்கி வசதிகள் மக்கள் சில வினாடிகளுக்குள் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்கியுள்ளது. இந்த வசதிகள் காரணமாக, நீங்கள் ஒருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. மொபைல்கள் வங்கிகளை மாற்றியுள்ளன மற்றும் பாக்கெட்டுகள் வங்கியின் முகவரியை மாற்றியுள்ளன.
இந்த நவீன தொழில்நுட்பங்கள் வங்கி வசதிகளை எளிதாகவும் வாடிக்கையாளர்களுக்கு அணுகவும் செய்துள்ளது. ஆனால் அவற்றில் நன்மைகள் உள்ளதுபோல் தீமைகளும் உள்ளன. தற்செயலாக உங்கள் பணத்தை ஏதேனும் தவறான கணக்கிற்கு மாற்றினால் என்ன செய்வது? ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே இந்த தவறை செய்திருக்கலாம். கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். வங்கி மோசடிகளிலும் இதேதான் நடக்கிறது. தவறாக அனுப்பப்பட்ட பணத்தை எப்படி திரும்பப் பெறுவது? கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றினால் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
நீங்கள் தவறுதலாக உங்கள் பணத்தை தவறான கணக்கிற்கு மாற்றியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது நேரத்தை வீணாக்காமல் உங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு விடுத்து, முழு விவரத்தையும் அவர்களுக்கு விவரிக்கவும். பிரச்சினை பற்றி தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி அவர்கள் கேட்டால், பரிவர்த்தனை பற்றிய முழு விவரங்களையும் மின்னஞ்சலில் கொடுங்கள். மேலும், பரிவர்த்தனை தேதி மற்றும் நேரம், உங்கள் கணக்கு எண் மற்றும் பணம் மாற்றப்பட்ட கணக்கை குறிப்பிட மறக்காதீர்கள்.
செயல்படாத கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால்
நீங்கள் செயல்பாட்டில் இல்லாத கணக்கிற்கு பணத்தை மாற்றியிருந்தால் பணம் தானாகவே உங்கள் சொந்த கணக்கிற்கு திரும்ப வந்துவிடும். நீங்கள் தொகையைப் பெறவில்லை என்றால், உங்கள் வங்கி கிளைக்குச் சென்று, மேலாளரைச் சந்தித்து, அவரிடம் பிரச்சினை பற்றிச் சொல்லுங்கள். தவறான கணக்கு எண்ணிற்கு ஒரு பரிவர்த்தனை நடந்திருந்தால் அல்லது IFC குறியீடு தவறாக இருந்தால், உங்கள் கணக்கில் உங்கள் பணத்தை எளிதாகப் பெறுவீர்கள்.
செல்லுபடியாகும் வங்கி கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால்
நீங்கள் மற்றொரு தவறான ஆனால் செல்லுபடியாகும் கணக்கிற்கு பணத்தை மாற்றியிருந்தால், உங்கள் பணத்தை திரும்பப் பெற சிறிது நேரம் ஆகலாம். சில நேரங்களில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்க்க மாதக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படும். நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய கணக்கின் வங்கி கிளையின் விவரங்களை உங்கள் வங்கியில் இருந்து பெறலாம். தவறான பரிவர்த்தனை பற்றி நீங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த விவரங்களை நீங்கள் சேகரிக்கலாம். அதேநேரம், தவறாக மாற்றப்பட்ட பணத்தை திருப்பித் தருவதற்காக, கணக்கின் உரிமையாளரிடம் வங்கி அனுமதி கேட்கும். அதன்பின் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
Source: Indian Express Tamil